முதல்முறையாக வெங்கட்பிரபு இயக்கப்போகும் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இணைந்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில். இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் புதிய படம் தான் “NC22”. இதில் பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்க. இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார். 

எனக்கு இதுவே முதல் முறை.. பிரபல இசையமைப்பாளருடன் இணைந்த வெங்கட்பிரபு.!

“NC22” என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக திகழ்ந்துவரும் இளையராஜாவுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாகவும். 

எனக்கு இதுவே முதல் முறை.. பிரபல இசையமைப்பாளருடன் இணைந்த வெங்கட்பிரபு.!

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறார். மேலும் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்திருக்கும் வெங்கட் பிரபுவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.