முகேன் ராவ் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

Velan Movie Review : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முகேன் ராவ்.

இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் கவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் வேலன். இந்தப் படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் முகேனுக்கு ஜோடியாக மீனாட்சி என்பவர் நடித்துள்ளார். மேலும் பிரபு, ஸ்ரீரஞ்சனி, சூரி பிராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர்.

முகேன் ராவ்வின் முதல் படமான வேலன் பாஸ் ஆகுமா? ஆகாதா? - வேலன் முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் : ஒரு ஊரில் செல்வாக்கு உடைய குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் பிரபு மற்றும் ஸ்ரீரஞ்சனி தம்பதியினர். இவர்களுடைய மகன் தான் முகேன் ராவ். இவர் கல்லூரியில் படிக்கச் செல்லும் போது அங்கே படிக்க வரும் மீனாட்சி மீது காதல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர்.

இப்படியான நிலையில் பிரபு குடும்பத்திற்கு பகையாளியாக இருக்கும் ஹரிஷ் பெராடி இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்த பிரபு இரண்டாவது நாயகியாக வரும் மரியாவுடன் திருமணம் நடைபெறும் என வாக்கு கொடுக்கிறார். இதனால் முகேனின் காதல் என்ன ஆனது? கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

முதல் படமாக இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் முகேன் ராவ். சில இடங்களில் மட்டும் ஓவர் ஆக்டிங் தெரிகிறது.

நாயகியாக மீனாட்சி அவருக்கான கதாபாத்திரத்தை அழகாக கொடுத்துள்ளார். பிரபு வழக்கம் போல அவருடைய நடிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளார். ஹரிஷ் பெராடி இன்னும் கொஞ்சம் வில்லத்தனத்தை காட்டியிருக்கலாம்.

முகேன் ராவ்வின் முதல் படமான வேலன் பாஸ் ஆகுமா? ஆகாதா? - வேலன் முழு விமர்சனம்

ப்ராங்ஸர் ராகுலின் காமெடி செல்லுபடியாகவில்லை. இரண்டாம் பாதியில் வரும் சூரி திரையரங்கை சிரிப்பலையில் சிதற வைக்கிறார்.

இயக்குனர் குடும்ப பாங்கான கதையை கையில் எடுத்து அதனை திறம்பட இயக்கியுள்ளார். படத்தின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளது.

தம்ப்ஸ் டவுன் :

சில இடங்களில் நடிகர்களின் ஓவர் ஆக்டிங் சலிப்பை கொடுக்கிறது.