
எதிர்பாராத நேரத்தில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியல் ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த சீரியலில் திரவியம் கதாநாயகனாக நடித்த வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களே ஆகிறது.
ஆனால் தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்த தொடரின் கதாநாயகனான திரவியம் அடுத்த சீரியல் ஆன சிந்து பைரவி சீரியலிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
