Varma Heroine
Varma Heroine

Varma Heroine : வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க போவது யாராக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் ஹீரோவாக அறிமுகமாகி நடித்த படம் வர்மா.

பாலா இயக்கிய இந்த படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 Entertainment நிறுவனம் அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அந்த அறிக்கையில் வர்மா திரைப்படம் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் போன்று இல்லை. ஆதலால் இப்படத்தை புது டீம் மற்றும் இயக்குனருடன் இணைந்து முதலில் இருந்து படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என அறிவித்து இருந்தது.

அதன் பின்னர் இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து தற்போது நாயகி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் துருவ்வுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதா கூறப்படுகிறது. ஆனா இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Jhanvi Kapoor
Jhanvi Kapoor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here