Varma Director

Varma Director : துருவ் விக்ரம் நடிக்க உள்ள வர்மா படத்தை மீண்டும் இயக்க இருப்பது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்துள்ள திரைப்படம் வர்மா.

இம்மாதம் திரைக்கு வர இருந்த இப்படம் அர்ஜுன் ரெட்டியுடன் கொஞ்சமும் ஒத்து போகாததால் குப்பைக்கு போனது நாம் அனைவரும் அறிந்ததே.

இதனையடுத்து மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் புதிய இயக்குனர் மற்றும் டீமுடன் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

அதன் பிறகு இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கவில்லையாம்.

தெலுங்குவில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்காவையே இயக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறதாம்.

ஒன்று சந்தீப் இயக்குவார் அல்லது அல்லது அவரிடம் இணை இயக்குனராக பணி புரிந்த கிரிசாயா இயக்குவார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.