தமிழக அரசு நாளை வெளியாக இருக்கும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Varisu &Thunivu government restrictions update viral:

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித்தின் துணிவும் , தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகி நேரடியாக மோதிக் கொள்ள உள்ளது. இதனால் தல, தளபதி ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது இதனால் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பலத்த கட்டுப்பாடுகளுடன் நாளை வெளியாகும் வாரிசு & துணிவு… தமிழக அரசின் சுற்றறிக்கை வைரல்.!

அதில், வரும் 13,14,15,16 ஆகிய பொங்கல் விடுமுறை நாட்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை, பால் அபிஷேகம், கட்டவுட் மற்றும் பேனர்களுக்கு அனுமதி இல்லை, கூடுதல் வினைகளுக்கு டிக்கெட் விற்பனை, பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது போன்றவற்றிற்கும் அனுமதி கிடையாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.