வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வைரல்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது.

சோல் ஆப் வாரிசு… கிளிம்ஸ் வீடியோவுடன் வெளியான 3rd சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு.!!

தெலுங்கு இயக்குனர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

சோல் ஆப் வாரிசு… கிளிம்ஸ் வீடியோவுடன் வெளியான 3rd சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு.!!

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் 3rd சிங்கிள் பாடலான “Soul of Varisu ” என்னும் பாடலின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த 3rd சிங்கிள் பாடல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு சிறப்பு வீடியோவுடன் தெரிவித்துள்ளது. அம்மாவுக்கான பாடலாக விவேக் எழுத்தில் உருவாகியுள்ள இப்பாடலை பிரபல முன்னணி பாடகி சித்ரா பாடியுள்ளார்.