Ajith-Varalaxmi

Varalaxmi : அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை என வரலட்சுமி சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் அதிகம் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் லிஸ்ட் – அஜித், விஜய்க்கு வந்த சோதனை.!

இந்த படத்தில் அஜித்துக்கு மனைவியாக பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிக்க படக்குழுவினரிடம் வாய்ப்பு கேட்டேன், ஆனால் அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்து விட்டார்கள் என டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

தல 59-ல் நானும் நடிக்கிறேன் – பிரபல நடிகர் அதிரடி அறிவிப்பு.!

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த சர்கார் படத்தில் நெகடிவ் ரோலில் வரலட்சுமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.