Thala 59

Thala 59 : தல 59 படத்தில் நானும் நடிக்கிறேன் என பிரபல நடிகர் பேட்டி ஒன்றில் அதிரடியாக கூறியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தற்போது வரை பல தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

தல 59 டைட்டில் இது தானா? – பலரையும் கவர்ந்த போஸ்டர்.!

இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் பிரபல நடிகரான டெல்லி கணேஷும் இணைந்துள்ளார்.

இவர் ஹிந்தியில் உருவான பிங்க் படத்திலும் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு அந்த படத்தில் முக்கியத்துவம் இல்லை.

தற்போது இது குறித்து டெல்லி கணேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஹிந்தியில் எனக்கு முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும் தமிழில் நடிக்க ஒப்பு கொண்டேன். காரணம் அஜித் படம் என்பதால் தான்.

மேலும் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை வலுவான கதாபாத்திரமாக மாற்றி அமைப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அடி விழும்.. குட்டி தலையை மிரட்டிய ஷாலினி – வைரலாகும் ஆத்விக்கின் வீடியோ.!

நான் நடிக்கிறேன் என தெரிந்ததும் மலேசியா, கனடா, கேரளா என பல பகுதியில் இருந்து போன் கால்கள் வந்தது. பலரும் அஜித்தை பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

Delhi Ganesh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.