தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும் கூறி விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார் நடிகை வனிதா.

Vanitha Quiet From BBJodigal : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா. சந்திரலேகா என்ற படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். சில படங்களில் நடித்த வனிதா ஆகாஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்து வந்தார் இன்னொரு திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பெற்றுக் கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

விநாயகன் எல்லாம் செய்வான்.!

பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்தார். இந்த காதல் பிரிவில் முடிந்த நிலையில் பீட்டர் பால் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே அவர் மிகப் பெரிய குடிகாரர் எனக் கூறி அவரையும் பிரிந்தார்.

மேலும் தற்போது படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி சுரேஷ் சக்ரவர்த்தி உடன் இணைந்து நடனம் ஆடி வந்தார். இந்த நிகழ்ச்சியில் தன்னை சிலர் அவமானப்படுத்தியதாக தரக்குறைவாக நடத்தியதாகவும் கூறி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் விஜய் டிவி உடனான உறவு அப்படியே தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Maha Movie Teaser | Review 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.