Vanitha in Bigg Boss Jodi

பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Vanitha in Bigg Boss Jodi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா. பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் நான்கு திருமணங்கள் செய்து அனைத்தும் விவாகரத்தில் முடிந்தது.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சில படங்களில் முதன்மை நாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான உடையில் பச்சை நிற லிப்ஸ்டிக் போட்டு நடனமாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கொடுமை இது என புகைப்படத்தை கிண்டலடித்து வருகின்றனர். உங்களுக்கு இது கொஞ்சம் கூட செட் ஆகல என்றும் சிலர் கூறி வருகின்றனர்.