வனிதாவின் கணவர் பீட்டர் பல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vanitha Husband Peter Paul Admitted in Hospital : சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா இரு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவர்களின் திருமணத்தைப் பற்றி பேசி வனிதாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் லிஸ்ட்டை எடுத்தால் அது நீண்டு கொண்டே செல்லும்.

தற்போது தான் இவர்களின் திருமணம் பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் குறையத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.