வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் இல்லை என போனிகபூர் அறிவித்துள்ளார்.

Valimai FL Release Postponed : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. மேலும் மே ஒன்றாம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இல்லை.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த போனி கபூர் - வெளியான பரபரப்பு அறிக்கை.!!

அஜித்தின் பிறந்தநாள் விருந்தாக வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் இருக்குமென ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் கொரானா வைரஸ் மற்றும் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வருவதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸை தள்ளி வைப்பதாக போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இல்லை.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த போனி கபூர் - வெளியான பரபரப்பு அறிக்கை.!!