எனது பெயரை அவமானமாக பார்க்கிறார்கள்: வடிவேலு ஆதங்கம்..

Web Ads

‘சிரிக்க வைத்தாலும், எனது பெயர் சிலருக்கு அவமானமாகவே தெரிகிறது’ என ஆதங்கமாய் தெரிவித்துள்ளார் வடிவேலு. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

‘நகைச்சுவைப் புயல்’ வடிவேலு நடிப்பில், சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’
திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இவர்களது கூட்டணியில் 14 ஆண்டுகளுக்கு மாஸ் காட்டியுள்ளது. இதனால், தொடர்ந்து வடிவேலுவும், சுந்தரும் இணைந்து படம் செய்ய வேண்டும் என திரை ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில், இது பற்றி வடிவேலு தெரிவித்துள்ள தகவல் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. அதாவது, அவர் தெரிவிக்கையில், ‘சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு அம்மா என்னிடம் இப்படி சொன்னார். அதாவது, ‘சிறையிலிருந்து வந்த ஒருவர் இன்னொருவரிடம் பணம் கேட்டிருக்கிறார். அதற்கு, அந்த நபர் தர முடியாது என்று கூறியிருக்கிறார்.

உடனே, இந்த நபரோ பணம் கொடுக்காத நபரை பார்த்து, ‘எனக்கா பணம் இல்லை என்று சொல்கிறாய். இன்று மாலை 5 மணிக்கு உன்னை நான் கொலை செய்வேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த சமயம், பணம் இல்லை என்று சொன்னவரின் தாய் வந்து என்ன விஷயம் என்று கேட்க, நடந்ததை இவர் சொல்லியிருக்கிறார்.

உடனே, அந்த அம்மாவோ ‘ அட அவன் கிடக்குறான்.. வடிவேலு நீ வா..’ என்று அழைத்து போனாராம். உடனே குத்துவேன் என்று சொன்னவரோ, ஹே யார பார்த்து வடிவேலுனு சொல்றனு சத்தம் போட்டிருக்கிறார். இப்படி சிலருக்கு வடிவேலு என்று சொன்னால் பிடிக்காது. எனது பெயரை அவமானமாக பார்க்கிறார்கள்’ என்றார். எப்படியோ, ‘ஜனங்களின் கலைஞன்’ வடிவேலு என உயர்ந்து விட்டார்.

vadivelu latest interview gone trending on social media
vadivelu latest interview gone trending on social media