தனுஷின் வாத்தி திரைப்படத்தின் ‘வா வாத்தி’ பாடலின் முழு வீடியோ வெளியானது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக கடந்த மாதம் வெளியான வாத்தி திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக நடிகர் சமுத்திரகனி நடித்து அசத்தியிருந்தார்.

கல்வியை மையமாகக் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் இடம் பெற்றிருந்த இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரசிகர்கள் அனைவரது ஃபேவரிட் பாடலான ‘வா வாத்தி’ பாடலின் முழு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது பார்வையாளர்களை குஷிப்படுத்தி வைரலாகி வருகிறது.