
வாடிவாசல் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!
வாடிவாசல் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்க இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
