
பொங்கல் கொண்டாடும் நந்தினி சூர்யா, சுந்தரவல்லி போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது..

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போடுகிறார். திடீர்னு போன் பண்ணி இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்கிறார். உங்களால் எனக்கு ஒரு உதவி ஆகணும் என்று சொல்ல என்ன செய்யணும் மட்டும் சொல்லுங்க என்று சொல்லுகிறார். பொங்கலுக்கு என் பையனும் தோட்டக்காரன் பொண்ணு ஊருக்கு வராங்க என்று சொல்ல, இதுங்களுக்கு பொங்கல் கொண்டாட்டம் கேக்குதா என்ற சுதாகர் சொல்லுகிறார். அவங்க இப்போ ஜோடியா அங்க வராங்க ஆனா திரும்பி சென்னைக்கு வரும்போது என் பையன் சூர்யா மட்டும் தான் வீட்டுக்கு வரணும் அந்த தோட்டக்காரன் பொண்ணு வரக்கூடாது என்று சொல்ல, என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க என்று கேட்க, என்ன பண்ணுவீங்க நல்லா என்ன கேட்காதீங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல அவ இந்த வீட்டுக்கு வரக்கூடாது. உடனே சுதாகர் நீங்க சொல்லிட்டீங்களா இதுக்கு மேல நான் பாத்துக்குறேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.
பிறகு சூர்யாவும் நந்தினியும் காரில் வந்து கொண்டு இருக்க, இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு நந்தினி உங்க ஊருக்கு என்று கேட்க இன்னும் தெரியல சார் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுதாகர் இன்ஸ்பெக்டர் மற்றும் நகை கடைக்காரர் மூவரும் குடித்துக்கொண்டு அவளை ஏதாவது பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அவள பழிக்கு பழி வாங்கியே ஆகணும். இந்த வாட்டி ஊருக்குள்ள வரல அவல மொத்தமா சோலிய முடிச்சு அனுப்பனும். ரொம்ப கவனமா இருக்கணும் அவள திரும்ப அங்க அனுப்பவே கூடாது. தெளிவா ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறேன் நீங்க ரெண்டு பேரும் அதை மட்டும் பண்ணுங்க என்று சொல்லுகிறார் சுதாகர். கிளம்புங்க என்று சொல்ல எங்கே என்று கேட்கிறார் நம்மை எதிரி ஊருக்குள்ள வரத கொண்டாட வேண்டாமா வா என்று கூப்பிடுகிறார்.
சூர்யா அல்மோஸ்ட் நம்ப ஊருக்குள்ள வந்துட்டோன்னு நினைக்கிறேன் என்று சொல்ல ஆமா சார் கொஞ்ச தூரம் தான் இருக்கு என்று சொல்லுகிறார். ஊருக்கு போன உடனே என்ன பண்ணுவ என்று சொல்ல அம்மாச்சி தங்கச்சி கிட்ட சந்தோஷமா பேசுவ பழைய தோப்பு போய் பாப்பேன் என்று சொல்லுகிறார் பழைய தோப்பா என்ன சொல்ற என்று கேட்க, உங்க வீட்ல உங்க அம்மா எங்களை தோப்ப விட்டு காலி பண்ணிட்டாங்க என்று சொல்ல சூர்யா என் கிட்ட ஏன் சொல்லல என்று கோபப்படுகிறார். ஒன்னும் பிரச்சனை இல்ல இதுக்காக நீங்க போய் உங்க அம்மாகிட்ட சண்டை எல்லாம் போடாதீங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுதாகர் அவர் எல்லைக்குள்ள வந்துட்டா அவ எங்க போற எங்க போற யார் கிட்ட பேசுறா என்பதை எல்லாத்தையும் நோட் பண்ணி என்கிட்ட சொல்லுங்க தப்பிக்க கூடாது என்று சொல்லுகிறார்.
ரஞ்சிதா செம்பருத்தி பூவை வைத்துக் கொண்டே அக்காவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். உடனே புனிதாவும் நானும் அக்காவுக்காக எலந்த வடை வச்சிருக்கேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அம்மாச்சி ஆரத்தி தட்டுடன் வர சிங்காரம் சீம்பால் எடுத்துக்கொண்டு வருகிறார். நால்வரும் வாசலை பார்த்து காத்துக் கொண்டிருக்க சூர்யாவும் நந்தினியும் காரில் வந்து இறங்க குடும்பத்தினர் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். நந்தினியை மட்டும் தங்கைகள் இழுத்துச் சென்று எப்படி இருக்க என்று நலம் விசாரிக்கின்றனர். உங்க எல்லாரையும் பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் புதுசா பிறந்து வந்த மாதிரி இருக்கு என்று சொல்ல, ரஞ்சிதா நந்தினிக்காக செம்பருத்திப்பூ கொடுக்க புனிதா எலந்த வடை கொடுக்கிறார். இவர்கள் பிசியாக பேசிக் கொண்டிருக்க சூர்யாவை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். நான் இங்க ஒருத்தன் இருக்க என்னையும் கண்டுக்கலாமென்று சொல்ல நாங்க வேற எங்கேயோ பேசிக்கிட்டு இருக்கோம் வாங்க தம்பி என்று சொல்லி கூப்பிடுகின்றனர். என்ன மேடங்களா என்னை ஞாபகம் இருக்கா என்று நந்தினி தங்கைகளிடம் கேட்க இருக்கு என்று சொல்லுகின்றனர்.
அப்போ எனக்கு எங்க எலந்த வடை என்று கேட்ட நான் அக்காக்கு மட்டும்தான் வாங்கினேன் என்று சொல்ல நந்தினி சூர்யாவிற்கு கொடுக்கிறார். மாமனாரே நான் எல்லா வடையும் கேள்விப்பட்டிருக்க இது என்ன எலந்த வடை என்ற சொல்ல அது ஒரு பழம் என்று சொல்லி அதில் இருந்து தயாரிப்பதாக சொல்லுகிறார் நந்தினி. எல்லாரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம் என்று சொல்லி, சூர்யா சாப்பிட்டு நன்றாக இருப்பதாக சொல்லுகிறார். இங்க கொஞ்சம் வசதி கம்மியா தான் இருக்கும் தம்பி என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நல்லா தான் இருக்கு என்று சொல்லி சூர்யா உட்காருகிறார். சிங்காரம் ஹோட்டல் ஏதாவது புக் பண்ணட்டுமா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது நான் இங்கேயோ தங்கிக்கிறேன் என்று சொல்லுகிறார். அம்மாச்சி இருவரையும் கை கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிடுகிறார்.
சூர்யாவை சாப்பிட உட்கார வைக்க நந்தினி அப்புறம் சாப்பிடுறேன் என்று சொல்லுகிறார்.அதெல்லாம் ஒன்னும் இல்ல நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடு என்று சொல்ல நான் தங்கச்சிக்கு கூட சாப்பிடுறேன் என்று சொல்லுகிறார் .அதெல்லாம் ஒன்னும் இல்ல அவங்க சாப்பிட்டுட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்க என்று உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுகின்றனர். சூர்யா சாப்பாடு செம சூப்பரா இருக்கு என்று சொல்ல அம்மாச்சி நீ இதெல்லாம் செஞ்சு குடுக்கலையா நந்தினி என்று கேட்கிறார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல உங்க பொண்ணு சூப்பரா சமைப்பா ஒரு நாள் உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சிருந்தா நானே காலி பண்ணிட்டேன் என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி தங்கைகளை உட்கார வைத்து மாற்றி மாற்றி சாப்பாடு ஊட்டி விட அவர்களும் நந்தினிக்கு சாப்பாடு ஊட்டுகின்றனர். சிங்காரம் இதையெல்லாம் பார்த்து கண் கலங்கி நிற்க, சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போட்டு திட்டம் போடுகிறார்.
வரப்போற இந்த பொங்கல என் ஊர்ல என் வீட்ல கொண்டாட போறேன். அது வெறும் வீடு இல்ல என்னோட உசுரு இருக்கிற இடம் என்று சொல்லுகிறார். சூர்யா நான் நந்தினி ஓட ஊருக்கு போறதே எங்க அம்மாவுக்கு புடிக்கல என்று சொல்ல மறுப்பக்கம் சுந்தரவல்லி போகிக்கு பழை சேர்த்து கொளுத்துற மாதிரி என் வீட்டில் இருந்து போனா அந்த நந்தினியை வெளியே தூக்கி எறியணும்.
தல பொங்கல் கொண்டாட அவ ஊருக்கு போறவ திரும்பி இங்க வந்துடவே கூடாது என்று சொல்லுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
