விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டு உள்ளார் நடிகர் தனுஷ்.
Unknown Secrets of Bagavathi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது படங்களில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து விட மாட்டோமா அல்லது விஜயுடன் இணைந்து நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு உண்டு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை யாரும் அவ்வளவு எளிதாக நழுவ விட்டு விட மாட்டார்கள்.
ஆனால் தனுஷ் நடிக்க வந்த ஆரம்பத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதனை அவர் வேண்டாம் என நழுவவிட்டு உள்ளார். ஆமாம் விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜயின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்து இருந்தார்.
ஆனால் முதலில் இந்த வேடத்தில் நடிக்க படக்குழு தனுஷை தான் அணுகியுள்ளது. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் தம்பியாக நடிக்க மாட்டேன் என சொல்லி தனுஷ் இந்த வாய்ப்பைத் தவற விட்டுள்ளார். அதன் பின்னர்தான் இந்த வாய்ப்பு நடிகர் ஜெய்க்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை நடிகர் தனுஷ் அண்ட் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார் திரையுலகில் இன்னும் வேகமாக முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.