தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

unknown secret of thug life movie

unknown secret of thug life movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சுவாரசிய தகவல் என்று வெளியாகி உள்ளது.

அதாவது சிம்புவின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ரவி மோகன் தான்.ஆனால் அந்த கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலாக தான் இருக்கும் என்ற காரணத்தினால் படத்திலிருந்து வெளியேறி உள்ளார்.அதன் பிறகு தான் சிம்பு நடிக்க வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown secret of thug life movie

unknown secret of thug life movie