குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

mr zoo keeper movie release date update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
அதன் பிறகு சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். இந்த நிலையை முதல்முறையாக புகழ் கதாநாயகனாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் வருகிற 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

mr zoo keeper movie release date update