குட் பேட் அக்லி பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், த்ரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படியான நிலையில் இந்த படத்தை பிரபல நடிகரான ஆர்கே சுரேஷ் மிஸ் பண்ணியுள்ளார் அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த போது அவைலபிலிட்டி இல்லை அது சரியாக அமையவும் இல்லை ஆனால் திரையில் படம் பார்க்கும்போது அந்த ரோலை மிஸ் செய்து விட்டேன் என வருத்தமாக பேசியிருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
