பிரபலங்களின் வலைத்தளங்கள் ஹேக்-தீர்வு என்ன?: ஸ்ருதிஹாசன் டென்ஷன்

Web Ads

டிஜிட்டல் உலகில், ஏன் இந்த விளையாட்டு? இதற்கு முற்றுப்புள்ளி எப்போது? என்ற தகவல்கள் பார்ப்போம்..

கமல்ஹாசனின் இரு மகள்களில் ஸ்ருதிஹாசன் காதல், பிரிவு, பேச்சு என்பதெல்லாம் வரும் தகவல்கள் ரீதியாக தெரிந்ததே.

ஸ்ருதி, தற்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘கூலி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது டென்ஷனை வெளிப்படுத்தி உள்ளார். எவ்வாறெனில், ‘என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். எனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது போஸ்ட் செய்யப்பட்டு வரும் பதிவுகளை நான் பதிவிடவில்லை.

எனவே, அந்த பக்கங்களில் இருந்து வரும் மெசேஜ் மற்றும் இதர விஷயங்களுக்கு பதிலளிக்காதீர்கள். விரைவில், தன் ட்விட்டர் கணக்கை மீண்டும் பெறுவேன்’ என கூறியுள்ளார் ஸ்ருதி. முன்னதாக, பல திரைப் பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. இந்நிகழ்வு தொடர்ந்து வருவது தகுந்த நடவடிக்கைக்கு உரியது.

ஹேக் செய்யப்பட்ட பக்கங்களை, பிரபலங்கள் சில நாட்களில் திரும்பப் பெற்றாலும், இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் பிரபலங்களின் கோரிக்கையாக உள்ளது. தீர்வு என்ன?

twitter hacked in actress shruti haasan tension