விஜய்யின் அரசியல் வியூகம் என்ன?: ரஜினியையும் மறைமுகமாய் தாக்கிப் பேசினாரா? வைரலாகும் விவாதம்..

தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாட்டில், அவர் பேசிய உரை குறித்து பற்பல விவாதங்கள் ஓயாது ஒலித்து வருகின்றன.
இந்நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக நிலைப்பாடு என்ன? விஜய்யின் பேச்சு சூப்பர் ஸ்டார் ரஜினியையும் குறி வைத்து தாக்கிப் பேசினாரா? என்பது குறித்து பார்ப்போம்..
அ.தி.மு.க. விஜய் கட்சியுடனோ, த.வெ.க. , அ.தி.மு.க.-வுடனோ இசைவுடன் செல்லலாம் என எடுத்துக்கொள்ளலாமா என்றால் அப்படியொரு சூழ்நிலையில்லை.
ஏனென்றால், அ.தி.மு.க. பலமுறை ஆண்ட கட்சி. எனவே, அந்த கட்சி ஒரு புதிய கட்சியின் கீழ் செல்லாது. இதனால், அ.தி.மு.க. கூட்டணி இசைவுடன் செல்ல வாய்ப்பில்லை.
இதனால், அ.தி.மு.க.-வை போட்டி வளையத்தற்குள் இழுக்காமல் நேரடியாக தி.மு.க.வை மட்டுமே குறிவைத்து விஜய் பேசியிருக்கிறார்’ என தகவல்கள் வெளியாகிறது.
2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டு என விஜய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய்யின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.
இந்நிலையில், ‘சொல் அல்ல செயல் தான் முக்கியம்’ என விஜய் எப்படி பேசினாரோ, அதே போலத்தான் விஜய்யின் செயல்களையும் தவெக நிர்வாகிகளின் செயல்களையும் பொறுத்தே அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு மக்கள் ஆதரவு தர முடிவு செய்வார்கள்.
‘இப்போ இல்லைன்னா, எப்பவும் இல்லை’ என பேசி விட்டு, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரேவசம் செய்வேன்’ என்றார்.
அதன் பின்னர், ‘இப்பவும் இல்லை. எப்பவும் இல்லை’ என பல வருடங்களாக ஒவ்வொரு படம் வெளியாகும் சமயத்திலும் அரசியலுக்கு வரப்போவதாக பன்ச் கொடுத்து விட்டு அரசியலுக்கு கடைசியாக உடல்நலத்தை காரணம் காட்டி, வரமுடியாது எனக் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், தொடர்ந்து சினிமாவில் மட்டும் எப்படி நடித்து வருகிறார் என்கிற விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க, நாம பாட்டுக்கும் நடிச்சோமா, நாலு காசு பார்த்தோமான்னு இருக்கலாம்னு தான் ஆரம்பத்தில் நானும் நினைச்சேன். ஆனால், நாம மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது சுயநலமில்லையா?
நம்மள வாழ வச்ச, இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணுமில்லையா? நிறைய காசு சம்பாதிச்சு என்ன செய்யப் போறோம். நம்ம மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம்? என ஏகப்பட்ட கேள்விகள் வந்தது. அதற்கான பதிலாகத்தான் அரசியலில் களமிறங்குவது என்கிற முடிவை எடுத்தேன்’ என விஜய் பேசினார்.
மோசமான ஹாஷ்டேக்குகளை விஜய்க்கு எதிராக தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ஹேட்டர்களும் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் பேச்சு, சூப்பர் ஸ்டாரை தாக்குவதாக விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில், அதற்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவது வைரலாய் தெறிக்கிறது.
எது எப்படியோ, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக அமையட்டும். ஒன்றுபட்டால்.. உண்டு வாழ்வு தானே.!

