Web Ad 2

‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்; முழு விவரம்..

Web Ads

சிறுதுளி தானே பெருவெள்ளம் ஆகிறது. அதுபோல், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்தி காட்ல செம மழைங்க.! விஷயம் என்னன்னா..

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

‘அமரன்’ டத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடந்து, நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது திடீர் ட்விஸ்டாக தன்னுடைய அடுத்த பட இயக்குனரை மாற்றி இருக்கிறார் சிவகார்த்தி.

அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் அள்ளிய ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் இயக்கத்தில் நடித்து முடித்ததும் சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இதனால், வெங்கட் பிரபு படம் மேலும் தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

வெங்கட் பிரபு இயக்கிய ‘கோட்’ படத்தின் கேமியோ ரோலில் வந்த சிவகார்த்திகேயன், தற்போது அவரது படத்தை டீலில் விட்டுள்ளதற்கு கோட் பட ரிசல்ட் தான் காரணமா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

‘கோட்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால், அவரை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டு, வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க சென்றிருக்க கூடும் என்றும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

வெங்கட் சாருக்கு, ரஜினி கிரீன் சிக்னல் கொடுத்தால், சிவகார்த்தி படம் டீலில் விடப்படும் தானே.!

Dirctor venkat prabhu next movie hero sivakarthikeyan
Dirctor venkat prabhu next movie hero sivakarthikeyan