மீண்டும் மாதவன்-ஷாலினி இணையும் அலைபாயுதே-2 படம்? அஜித் சம்மதிப்பாரா?

எத்தனையோ காதல் கதைகளை தமிழ்திரை உணர்வுப்பூர்வமாய் வழங்கியிருக்கிறது. அதில், குறிப்பிடத்தக்கது ‘அலைபாயுதே’ திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என எதிர்பார்க்கும் வகையில், இதோ 24 வருடங்களுக்கு பிறகு, புன்னகை பொங்கும் ஓர் சந்திப்பு பாரீர்..

சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த ஷாலினி, ஹீரோயினாக தமிழில் நடித்தது வெறும் 5 படங்கள் தான். இந்த ஐந்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இதில், அவர் முதன்முதலில் நடித்த படம் காதலுக்கு மரியாதை. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி.

இப்படம், பெரிய அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு என்கிற படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் ஷாலினி. தொடர்ந்து 2 படம் விஜய்யுடன் நடித்த ஷாலினிக்கு, மூன்றாவதாக அஜித் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அவர்கள் இருவரும் முதன்முறையாக அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர்.

அப்படம் ஹிட்டானதோடு, அவர்கள் இருவரின் காதலுக்கும் பிள்ளையார் சுழி போட்டது. அமர்க்களம் படத்தில் நடித்து முடித்த கையோடு ஷாலினியை கரம்பிடித்தார் அஜித்குமார். திருமணத்துக்கு பின்னர், சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த ஷாலினி, அதுவரை கமிட்டான படங்களில் மட்டும் நடித்து முடித்தார்.

அந்த வகையில், 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக அலைபாயுதே, பிரசாந்த் உடன் பிரியாத வரம் வேண்டும் ஆகிய இரண்டு படங்கள் தான் திருமணத்துக்கு பின் அவர் நடிப்பில் வெளியான படங்களாகும்.

இதில், அலைபாயுதே படம் ஷாலினியின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாகும். தமிழ் திரையுலகில் காதல் படம் எடுக்கும் பலருக்கும் அப்படம் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. அப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி.

அலைபாயுதே படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது ஷாலினி – மாதவன் இடையேயான கெமிஸ்ட்ரி தான். அப்படத்தின் அவர்கள் இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அந்த ஜோடி அதன் பின் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா என ஏங்கும் அளவுக்கு அவர்களின் நடிப்பு இருந்தது.

இந்நிலையில், தற்போது 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாலினியும் மாதவனும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது மாதவன் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலினி. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘எவர்கிரீன் ஜோடி’ என்ற கமென்ட்ஸ் வைரலாகி வருகிறது.

அப்டின்னா, அலைபாயுதே-2 படம் எடுக்க மணி சார் ரெடியானால், அஜித் சம்மதிப்பாரா?

Actress shalini and madhavan meet after 24 years
Actress shalini and madhavan meet after 24 years