13 வருடங்கள் காத்திருந்து, அஜித்தை பழி தீர்த்த திரிஷா? #டீகோட் அலப்பறை
சினிமாக்காரர்களை விடவும், படம் பார்க்கிற ஆடியன்ஸ்தான் செம கிரியேட்டர்ஸ்ங்க. எப்படின்னு பார்க்கலாம், வாங்க..
‘தல’ அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வெளியாகி, 13 ஆண்டுகளுக்குப் பின், ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி உள்ளது.
இப்படத்தில், கணவன் அஜித்திடம் திரிஷா விவாகரத்து பெற விரும்புகிறார். மேலும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்படுவதால், அஜித்துடன் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்.
தான் வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவருடன் சென்று வாழ விரும்புவதாகவும், தெரிவித்தே விவாகரத்து கேட்பார். இப்படியான காட்சிகள் ‘விடாமுயற்சி’ படத்தில் உள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர், 13 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னை காதலித்து ஏமாற்றிய அஜித்தை, திருமணம் செய்து ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா பழிவாங்கி விட்டார் என ரசிகர் ஒருவர் இரண்டு படங்களையும் சேர்த்து, டீ கோட் செய்கின்றேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு இணையவாசிகள் மத்தியில், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேபோல் ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா இறந்து விடுவார் என்பதை டீகோட் செய்த ரசிகர் மறந்துவிட்டார் எனவும் பதிலுக்கு பதிவிட்டு வருகிறார்கள்.
‘விடாமுயற்சி’ படத்திற்கு இப்படியொரு டீ கோட் இருக்கும் என அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, ‘விடாமுயற்சி’ படக்குழுவினரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அடடா.. ‘தல’ ஃபேன்ஸ்ங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.!