ஃபராகான் கொடுத்த முத்தம் அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு; ஜஸ்க்கு பிடிச்சிருக்கா?: வைரலாகும் கேள்வி..
முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான். அது யார் யாருக்கு எதற்கு கொடுத்தார்? என்பதை பொறுத்து அமைகிறது. இது குறித்த நிகழ்வு காண்போம்..
பாலிவுட் சினிமாவில் சல்மான்கானை தொடர்ந்து விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா ராய் அந்தக் காதலையும் பிரேக் அப் செய்தார்.
பின்னர், அமிதாப்பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் நடந்து முடிந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில், அபிஷேக்கிற்கும், ஐஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என தொடர்ந்து கூறப்பட்டது. இந்தத் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று இருவரும் தெளிவுபடுத்தி விட்டனர்.
மேலும் சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அபிஷேக்பச்சன் தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அதனையொட்டி அபிஷேக் பச்சனின் சிறு வயது ஃபோட்டோக்களை பகிர்ந்து ஐஸ்வர்யா ராய் தனது காதல் கணவருக்கு வாழ்த்தினை தெரிவித்தார். அது வலைதளங்களில் டிரெண்டானது. மேலும், எடுக்கப்பட்ட இன்னொரு வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.
அதாவது அபிஷேக் பச்சனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குநரும், நடன அமைப்பாளருமான ஃபரா கான் கலந்துகொண்டார். அப்போது, அபிஷேக் பச்சனை கட்டியணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தங்களை கொடுத்தார். இதனால், அபிஷேக்பச்சன் திண்டாடிப் போனார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் ஃபரா கான், ‘நான் செய்வது பிடிக்காத மாதிரியே அபிஷேக்பச்சன் இருப்பார். ஆனால், அது அவருக்கு பிடிக்கும்’ என தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்ஸ் ‘ அவருக்கு பிடிக்கும்தான். ஆனால், அவரோட அவருக்கு(ஐஸ்க்கு) பிடிக்குமா?’ என தெரிவித்திருப்பது செம வைரலாகி வருகிறது.