ஆடுகளம் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Trisha in Adukalam Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆடுகளம். தனுஷுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த இந்தத் திரைப்படத்தில் நாயகியாக டாப்சி நடித்திருந்தார்.
ஆடுகளம் படத்தின் மூலமாகத்தான் டாப்ஸி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது டாப்ஸி இல்லை. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான த்ரிஷா தான்.
இந்த படத்தில் த்ரிஷா சில காட்சிகளில் நடித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.