‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..
சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம்.
தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.
மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரிஷாவுக்கு படங்கள் உள்ளன. இதில் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ என்கிற படத்திலும் மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக ‘ஐடண்டிட்டி’ என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் ‘ தக் லைஃப்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா.
இவ்வாறு சினிமாவில் செம பிசியாக இருக்கும் திரிஷாவுக்கு நாய்கள் என்றால் பிரியமோ பிரியம். இதனால், தன் வீட்டில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார் திரிஷா.
அதில், அவரின் பேவரைட் நாயின் பெயர் ஜாரோ. இந்த நாயை கடந்த 2012-ம் ஆண்டு முதல் வளர்த்து வருகிறார் திரிஷா. அதை நாய் என்று சொல்ல விரும்பாத திரிஷா, ஜாரோவை தன் மகனாகவே வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நடிகை திரிஷாவின் செல்ல நாய் ஜாரோ திடீரென உயிரிழந்துள்ளது. இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள திரிஷா.
‘என் மகன் ஜாரோ கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை இறந்துவிட்டான். இதன்பின் என் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகிவிட்டது என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், நானும் என் குடும்பத்தாரும் உடைந்துபோய் உள்ளோம்.
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நேரம் ஆகும் என கண்ணீர் மல்க பதிவிட்டு, ஜாரோ அடக்கம் செய்தபோது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் திரிஷா. இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
# RIP… ஆழ்ந்த இரங்கல்..!