அஜித் கட்சி ஆரம்பிக்கட்டும் சொல்றேன்: நடிகர் ரமேஷ் கண்ணா பேச்சு
விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, ரமேஷ் கண்ணா சொன்ன பதில் தற்போது வைரலாகிறது. இது குறித்துப் பார்ப்போம்..
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் என பலர், நடித்திருக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
‘துணிவு’ படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக அஜித் தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்தில் அஜித்தின் நண்பரும் நடிகர் மற்றும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா கூறிய விஷயம் செம வைரலாகி வருகின்றது.
‘வில்லன்’ படத்தில் துவங்கி அஜித்துடன் பல படங்களில் நடித்திருக்கிறார் ரமேஷ் கண்ணா. அதுமட்டுமல்லாமல், அஜித்தை வைத்து ‘தொடரும்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இவ்வாறு அஜித்தின் நெருங்கிய நண்பராக இருக்கும் ரமேஷ் கண்ணாவிடம் சமீபத்தில் சிலர், ‘விஜய் கட்சி துவங்கியுள்ளார், அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன? என கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ் கண்ணா, ‘அஜித் கட்சி ஆரம்பிக்கட்டும், அதன் பிறகு சொல்றேன்’ என கூறியிருக்கின்றார். இவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மைல்டா ஹியூமர் சொல்வதில் தேர்ச்சி பெற்றவர் ரமேஷ் கண்ணா. அவ்வகையில், இவர் சொன்ன சாமர்த்தியமான பதில் குறித்து ‘தல’ அஜித்திடம் கேள்வி எழுப்பினார், அவர் என்ன பதில் தருவாரோ? வெயிட்டிங்..!