Pushpa 2

‘சினிமா பக்கமே வரக்கூடாது’ என சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்தார்: கே.எஸ்.ரவிக்குமாரின் 3 மகள்கள் வாய்ஸ்

மாஸ் இயக்குநர், ஜாலி நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருக்கின்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

முன்னதாக, ஆர்.பி. சௌத்ரி. தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘புது வசந்தம்’ கொடுத்த வெற்றிக்கு பிறகு, ரவிக்குமார் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.

அதன் பிறகு சரத்குமார், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை இயக்கி வரிசையாக பல படங்களை இயக்கினார்.

இதனிடையே, இவர் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜனனி, ஜஸ்வந்தி, மாலிகா என 3 மகள்கள் உள்ளனர்.

மூவருமே படித்து முடித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். இதில், மாலிகா லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜனனி பிட்னஸ் ஆர்வலராக இருக்கிறார். அதோடு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஜஸ்வந்தி ஒரு மருத்துவர். அர்மோரா என்ற டெர்மடாலஜி என்ற கிளினிக் வைத்திருக்கிறார். இவருடைய கணவர் ஆனந்த் கூட ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் ஒரு சினிமா இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக இருந்தும் தன் 3 மகள்களையும் சினிமா பக்கமே வரவிடாமல் செய்திருக்கிறார்.

இதற்கு என்ன காரணம் என தெரியாத போதிலும், “எங்களை சினிமா பக்கமே வரக்கூடாது என்று சொல்லிச் சொல்லி தான், எங்களை அப்பா வளர்த்தாங்க” என்று கே.எஸ்.ரவிக்குமாரின் 3 மகள்களும் கூறியிருக்கிறார்கள்.

இது குறித்து கே.எஸ். ரவிக்குமார் விளக்கினால் தான் திரையுலகுக்கும், தீவிர ரசிகர்களும் நன்கு புரியும்.! சொல்வாரோ.?

why ks ravikumar did not allow his daughters entered into cinema