ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ரம்யா பாண்டியன்: இன்ஸ்டா போட்டோஸ்..
காதல் கணவருடன் தேனிலவில் பிஸியாய் இருக்கும் ரம்யா, தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் வருமாறு:
‘டம்மி டப்பாசு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தார்.
இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது அவரின் மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோஷூட்டால் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா.
விஜய் டிவி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமான ரம்யா, சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வந்து டைட்டில் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார்.
பிக் பாஸுக்கு பின் சினிமாவில் அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தினார். சினிமா வாய்ப்புகள் வரவில்லை.
பின்னர், ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் தங்கி யோகா பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கு பயிற்சியாளராக பணியாற்றும் லோவெல் தவான் மீது காதல் ஏற்பட்டு, சில மாதங்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையோரம் நடைபெற்ற ரம்யா பாண்டியன் – லோவெல் தவான் திருமணத்தில் உறவினர்கள் கலந்துகொண்டனர். பின்னர், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இதையடுத்து, தன் காதல் கணவருடன் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற ரம்யா, அங்கு தன் கணவருடன் சேர்ந்து தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
‘எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்’ என்ற கண்ணதாசன் பாட்டு வரிகளுக்கேற்ப ரம்யாவின் திரைப்பயணமும், இல்லறமும் நிகழ்ந்திருக்கிறது போலும்.!