Pushpa 2

திரைப்பயணத்தில் வெற்றிகரமாக 22 வருடத்தை கடந்த திரிஷா, குவியும் வாழ்த்து..!

திரைப்படத்தில் வெற்றி கரமாக 22 வருடத்தை கடந்துள்ளார் திரிஷா.

trisha 22 years of cinema field

trisha 22 years of cinema field

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழில் மௌனம் பேசியதே, சாமி ,கில்லி, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது திரைப்பயணத்தில் 22 வருடங்களை கடந்துள்ளதாகவும் அதற்கு நன்றி தெரிவித்து புகைப்படத்துடன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.