Web Ads

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

tourist family and retro movie 10 days collection
tourist family and retro movie 10 days collection

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 10 நாளில் 36 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் 10 நாளில் 93 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை விட ரெட்ரோ திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இனி வரும் நாட்களில் வசூலில் என்னென்ன மாற்றம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.