இந்த 2021 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த ஐந்து தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 5 Collection Movies in Tamil 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். கொரானா காரணமாக ஒரு வருடமாக பெரிய அளவில் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை வெளியாகியுள்ள படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. மாஸ்டர் :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரூபாய் 250 கோடி வசூலுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

  1. அண்ணாத்த :

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரூபாய் 150 கோடி வசூலை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

  1. மாநாடு :
கெத்து காட்டிய தளபதி.. தனுஷ், சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய சிம்பு - 2021ல் அதிகம் வசூல் செய்த‌ 5 படங்கள் லிஸ்ட் இதோ
கிரிக்கெட் டுடே :
வார்னர்-லாபஸ்சேன் மிரட்டல் : இங்கிலாந்து அணி மிரட்சி..

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரூபாய் 101.5 கோடி வசூல் செய்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

  1. டாக்டர் :

பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் உடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

Night Phone பண்ணி எந்த நடிகர்..எந்த நடிகையை வச்சு இருக்காங்க கேக்குறான் – Mayilsamy Ultimate Speech

  1. கர்ணன் :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரூபாய் 70 கோடி வசூல் உடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.