Pushpa 2

2024 இல் வெளியாகி டாப் 10 இடத்தை பிடித்த தமிழ் திரைப்படங்கள்.. உங்கள் ஃபேவரைட் திரைப்படம் எது? கமெண்ட் பண்ணுங்க..!

இந்த ஆண்டில் வெளியாகி சிறந்த டாப் 10 இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் படத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காத்திருப்பும் இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியாகி சிறந்த தமிழ் படமாக டாப் 10 இடத்தை பிடித்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

Top 10 Tamil Movies Released in 2024
Top 10 Tamil Movies Released in 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

ஒன்பதாவது இடத்தை நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் பிடித்துள்ளது.

எட்டாவது இடத்தை அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்த லப்பர் பந்து திரைப்படம் பிடித்துள்ளது.

ஏழாவது இடத்தை ஹாரர் மற்றும் காமெடி திரைப்படமான அரண்மனை 4 பிடித்துள்ளது. தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ஆறாவது இடத்தையும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

நடிகர் கார்த்தி அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் நான்காவது இடத்தையும்,சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

முதல் இடத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் ஆன மகாராஜா திரைப்படம் பிடித்துள்ளது. இந்தப் பத்து சிறந்த டாப் 10 திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Top 10 Tamil Movies Released in 2024
Top 10 Tamil Movies Released in 2024