புகைப்படத்துடன் மணிமேகலை வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..!
புகைப்படத்துடன் மணிமேகலை பதிவு ஒன்றை வெளியிட வாழ்த்து குவிந்து வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நான்கு சீசன் கோமாளியாக இருந்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சென்னையில் புது வீடு வாங்கியுள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.அதில் பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் தொடங்கிய எங்களது பயணம் ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட் சொந்தமாக வாங்கியதன் மூலம் என்னுடைய மிகப்பெரிய கனவு நிறைவேறி உள்ளது.
2021 ஆம் ஆண்டு வீட்டை புக் செய்த நிலையில் அதன் பணிகள் தொடர்ந்து தற்போது எங்கள் கைக்கு வந்துள்ளது இது என் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன். ஸ்ரீ ராம ஜெயம், மாஷா அல்லாஹ் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் அவரது சொந்த ஊரில் வீடு ஒன்றை கட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram