தர்ஷிகா, ஜெஃப்ரி இடையே உருவான பிரச்சனை?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் நடந்த போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் யார் என்று தேர்வு செய்யுமாறு பிக் பாஸ் சொல்லி இருக்கிறார். அவர்கள் அனைவரும் சௌந்தர்யா மற்றும் ஜாக்லினை சொல்ல நீங்கள் இருவரும் நான் அனுப்பும் சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லி உப்பில்லாத சாப்பாட்டை பிக் பாஸ் கொடுக்கிறார்
டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்கை சிறப்பாக செய்த போட்டியாளர்கள் குறித்து சொல்லுகின்றனர். அதில் டெவில்ஸ் டாஸ்க்கில் இரண்டு பேரையும் ஏஞ்சல் டாஸ்கில் இரண்டு பேரையும் தேர்வு செய்ய சொல்ல ரஞ்சித், பவித்ரா, மஞ்சரி, தீபக் ஆகியோர் தேர்வு செய்கின்றனர் இவர்கள் நால்வரும் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று பிக் பாஸ் சொல்லுகிறார்.
அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தர்ஷிகா மற்றும் ஜெஃப்ரி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. நான் தான் தப்ப உணர்ந்துட்டேன்னு சொன்னதுக்கு அப்புறம் எதுக்கு ஒவ்வொருத்தரா வரீங்க எனக்கு சுகர் கிரேவிங் இருந்ததனால் அப்படி பண்ண என்று சொல்ல மற்ற போட்டியாளர்களும் தர்ஷிகாவை குறை சொல்லுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram