TN Govt Action in Suriya Movie Issue
TN Govt Action in Suriya Movie Issue

ஜோதிகா பட பிரச்சினையில் தமிழக அரசு தலையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN Govt Action in Suriya Movie Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தையும் இவர் தயாரித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் இப்படத்தை நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பொன்மகள் வந்தாள் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அமேசான் வீடியோவில் வெளியிட்டால் இனி சூர்யா ஜோதிகாவின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வருகிறது.

இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு அவர்கள் பிரச்சனை வேண்டாம். இது பேசித் தீர்க்க வேண்டிய ஒன்று.

இரு தரப்பினரும் அமர்ந்து பேசினால் பிரச்சினை தீர்ந்து விடும். இதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.