TN Government Order on Vinayagar Chaturthi Celebration
TN Government Order on Vinayagar Chaturthi Celebration

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து தமிழக முதல்வர் அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

TN Government Order on Vinayagar Chaturthi Celebration : இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் பரவல் உச்சத்தை தொற்று வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பொது நிகழ்ச்சிகள், வழிபாட்டுத் தளஙகளை திறக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசும் மத்திய அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றி வருகிறது.

இதன் காரணமாகவே வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. அவரவர் வீடுகளில் பூஜை செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழகம், இனி ரேஷன் கடைகளில் இதுவும் ஃப்ரீ – தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு

இதற்கு தமிழக பிஜேபி தலைவர் முருகன், பிஜேபியை சேர்ந்த எச் ராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் தமிழக முதல்வர் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும், கூட்டம் கூட அனுமதியளித்து கொரோனா பரவலை அதிகப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளார்.

அதேசமயம் அதிமுகவின் ஐடி விங் எச் ராஜா தன்னுடைய ட்விட்டரில் தரக்குறைவாக பதிவிட்டுள்ள பதிவு அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும், தங்களுக்கும் பிஜேபிக்கும் இடையே இருக்கும் நட்பில் எந்தவித விரிசலும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழக அரசின் விதிமுறைகளை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.