TN CM Respect to Dheeran Chinnamalai Statue
TN CM Respect to Dheeran Chinnamalai Statue

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

TN CM Respect to Dheeran Chinnamalai Statue : இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தர வேண்டும் என போராடிய போராட்ட வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை. அவருடைய நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி.

தமிழக முதல்வர் பெயரில் சென்னையில் உருவான புதிய நகர்..!

மேலும் அவரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது மாண்புமிகு துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்‌.பி வேலு மணி, மாண்புமிகு மீன் வளம், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டி ஜெயக்குமார் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.