கமல் செலுத்திய அபராதம்: ‘தக் லைஃப்’ ஓடிடி.யில் ரிலீஸ்
‘தக் லைஃப்’ ஓடிடி.யில் வெளியாகும் தகவல் பார்ப்போம்..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கூட வசூலிக்கவில்லை.
இப்படத்தின் லாபத்தில் இருந்து பங்கு எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னர் தான், ஓடிடியில் வெளியிடுவேன் என கூறியிருந்தார் கமல்ஹாசன்.
ஆனால், தற்போது படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி அமையாததால், அப்படத்தை 4 வாரத்திலேயே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இதற்காக மல்டிபிளக்ஸ் கவுன்சிலுக்கு ரூ.25 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே போட்ட 8 வார ஒப்பந்தத்தை மீறி உள்ளதால், இந்த அபராத தொகையை செலுத்தி உள்ளதாகவும், இதனால் தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூலை 4-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.