இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்..
வீட்டுக்குள் ஒரு தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். அவ்வகையில், குடும்பத்தோடு சுதந்திரமாய் ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என காண்போம் வாங்க..
பேட்ட ராப்: எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம் பேட்ட ராப். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். நடிகை சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த இப்படம், இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் Beyond The Fairy Tale: நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது தெரிந்ததே. இவர்களின் திருமணத்தை ஓர் ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் உருவாக்கி இருந்தது. இதை கெளதம் மேனன் டைரக்ட் செய்துள்ளார்.
இந்த ஆவணப்படம் படம், கடந்த 2 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாக உள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 18-ந் தேதி இந்த டாக்குமெண்ட்ரி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
சார்: போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நாயகனாக நடித்த படம் சார்.
இப்படம் கடந்த அக்டோபர் 18-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது.
அதன்படி ‘சார்’ திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகிறது.
பிற மொழிப் படங்கள்: அடித்தட்டு என்கிற மலையாள படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்டிரீம் ஆகிறது. தெலுங்கில் ரேவு ஆஹா ஓடிடியிலும், உஷா பரிநயம் ஈடிவி வின் தளத்திலும், மா நன்னா சூப்பர்ஹீரோ அமேசான் பிரைமிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்தியில் தி மேஜிக் ஆஃப் ஷிரி ஜியோ சினிமாவிலும், ஃபிரீடம் அட் மிட்நைட் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆங்கிலத்தில் டெட்பூல் அண்ட் வோல்வரின் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. அதற்கேற்ப படம் பார்த்து என்ஜாய்..!