அதுதான் என் பிரச்சினை: நடிகை கயாடு லோகர் ஃபீலிங்ஸ்..
அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் அறிமுகமானார் கயாடு லோகர். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறிவிட்டார்.
தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இம்மார்டர்’ என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர்-49 என்ற படத்திலும் இணைந்துள்ளார். அடுத்ததாக ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோகர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் அவர் தெரிவிக்கையில், ‘உங்களிடம் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது என்ற கேள்விக்கு, ‘நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் ஆள், அதுதான் என் பிரச்சினையாகவே நினைக்கிறேன் அதனால், எளிதில் மனம் உடைகிறேன். எனவே, அந்தப் போக்கை மாற்றிக்கொண்டு இன்னும் உறுதிமிக்கவளாய் எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்’ என கூறியுள்ளார்.
