நான் படாத கஷ்டமே கிடையாது: சாய் தன்ஷிகா ஓபன் டாக்..

சாய் தன்ஷிகா ஆக்சன் அவதாரமாக நடித்த ‘யோகிடா’ படம் தியேட்டர்களில் ரிலீஸாகி இருக்கிறது. கவுதம் கிருஷ்ணா இயக்கிய உந்த படத்தில் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் தன்ஷிகா. டூப் வேண்டாம் என்று சொல்லி அவர் ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்தபோது பீர் பாட்டில் குத்தி அவருக்கு கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது.

இப்படி அவர் கஷ்டப்பட்டு நடித்த ‘யோகிடா’ படம் பார்ப்பவர்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள். 17 ஆண்டுகளாக தனக்கு சினிமா பட வாய்ப்பு வந்து கொண்டிருப்பதை நினைத்து பெருமிதமாய் பகிர்ந்துள்ளார்.

தன்ஷிகா தெரிவிக்கையில், நிஜத்தில் தான் போல்டு எல்லாம் கிடையாது. கண்ணீர் விடும் ஆள். நான் படாத கஷ்டமே கிடையாது. மிக எமோஷனலாக இருத்தால் அழுதுவிடுவேன்.

மேலும் எதிர்காலத்தில் இயக்குநராகும் ஆசை இருக்கிறது. ஆனால் இயக்கம் என்பது சாதாரண காரியம் இல்லை. உதவியாளராக இருந்து கற்க வேண்டும். அதன் பிறகு வாய்ப்பு கிடைத்தால் படம் இயக்குவேன். இது ஜோக் கிடையாது. நான் படம் இயக்க கற்க வேண்டும்.

இது பற்றி ரசிகர்கள், ‘விஷாலுக்கு இயக்கமும் தெரியுமே. அவரிடம் சொன்னால் கற்றுக் கொடுக்கப் போகிறார். அவர் இயக்கும் படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்யலாமே தன்ஷிகா’ என்கிறார்கள்.

விஷாலுக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவுக்காக இருவரும் காத்திருக்கிறார்கள். அந்த வேலை முடிந்தால் சாய் தன்ஷிகா, விஷால் திருமணம் நடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

yogida movie actress sai dhanshika images 1200
yogida movie actress sai dhanshika images 1200