எங்க அண்ணனுக்காக குரல் கொடுப்பேன்: ‘ஜனநாயகன்’ விவகாரம் பற்றி சிம்பு..

ஹெச்.வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகாது என கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, சென்சார் போர்டு சிக்கல் தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றத்திற்கும், பிறகு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் ஜனநாயகன் குறித்து சிம்பு சொன்ன கருத்து வைரலாகி விட்டது.

இது தொடர்பாக ட்வீட் செய்த சிம்பு தற்போது தெரிவிக்கையில், ‘இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் இருந்திருக்கிறார் விஜய் அண்ணா. அவர் கடைசியாக நடித்திருக்கும் படம் ரிலீஸாக வேண்டும். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’ என்றே ட்வீட் செய்தேன் என்றார். தனக்கு அரசியலும் தெரியாது, அதில் அனுபவமும் கிடையாது, அது குறித்து பேச, தான் சரியான ஆளும் இல்லை’ என மேலும் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் பயணத்திற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு. ஜனநாயகன் பட விவகாரத்தில் திரையுலகினர் ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று சிலர் கேட்டார்கள். படத்தின் ஹீரோ விஜய்யே எதுவும் பேசாதபோது அடுத்தவர்கள் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது என்று சினிமா ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில், எங்க அண்ணனுக்காக நான் குரல் கொடுப்பேன் என்று சிம்பு பேசியிருப்பது விஜய் ரசிகர்களை கவர்ந்து வைரலாக தெறிக்கிறது.

vijay in jananayagan issue brother silambarsan boldly voices
vijay in jananayagan issue brother silambarsan boldly voices