விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு: அஜித் பேச்சு வைரல்..
அஜித் நடிப்பில் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸ் சிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், ரேசிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய என்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக கார் ரேசிங்கில் அஜித் ஈடுபட்டு வருகிறார். கார் பந்தயங்களில் ஈடுபட்டுள்ள போதிலும் கிடைக்கும் நேரத்தில் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கார் ரேஷிங்கில், அஜித்தை காண ரசிகர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். இந்நிலையில், அஜித் தெரிவிக்கையில், ‘இது எனக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சௌகரியத்தை விட்டு வெளியே வரும்போது, அவர் அப்படி செய்யலாமா கூடாதா என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன நானும் அதை எதிர்கொள்கிறேன்.
மலேசியா துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி. ‘சர்க்யூட் ஆப் ஸ்பா’வில் என்னை ஆதரிக்க சுமார் 900 ரசிகர்களும் நர்பர் கிங்கில் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர்.
நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது. உண்மையாக சொல்லப்போனால், நான் இதை எனக்காக செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு் என்னால் முடிந்த வரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுநராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்’ என கூறியுள்ளார். தற்போது அவரது ரசிகர்களார் இந்த ஸ்பீச் வைரலாகி வருகிறது.
