இந்த வாரம், தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பற்றிப் பார்க்கலாம்..
தக் லைஃப்: மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. பான் இந்தியா படமான இதில் சிம்பு, திரிஷா, நாசர், அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பேரன்பும் பெருங்கோபமும்: இயக்குனர் தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவப்பிரகாஷ் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்துள்ளார். ஹீரோயினியாக ஷாலி நிவேகாஸ் இணைந்துள்ளார். இப்படம் வருகிற 5-ந்தேதி திரைக்கு வருகிறது.
பரமசிவன் பாத்திமா: இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா’. விமல் நாயகனாக நடிக்க, ஜோடியாக சாயாதேவி இணைந்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, கூல் சுரேஷ், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 6-ந்தேதி ரிலீஸாகிறது.
மெட்ராஸ் மேட்னி: அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற 6-ந்தேதி ரிலீஸாக உள்ளது.

the theatre release movies on june 5 and 6