கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை எத்தனை கோடி தெரியுமா.? போட்டி போடும் நிறுவனங்கள்..!
கூலி படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், அனிருத் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா, நாகர்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவலும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது கூலி படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறதாம் அதாவது 80 கோடி வரை கொடுத்து இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
