‘ஓஹோ எந்தன் பேபி’ படம் குறித்து விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

Web Ads

விஷ்ணு விஷாலின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார். இது குறித்துக் காண்போம்..

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமான்டிக் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இதை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார்.

நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக மிதிலா பால்கர் இணைந்துள்ளார்.

இப்படம் பற்றி விஷ்ணு விஷால் கூறும்போது, ‘இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளன. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே என் தம்பி ருத்ராவை நடிக்க வைத்தேன். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம்.

Web Ad 2

நடிகர் சூர்யா சார் தயாரிப்பில் எப்படி கார்த்தி சாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அப்படி, இனிவரும் காலத்தில் ருத்ரா நடிக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க இருக்கிறேன்.

நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால், என் தம்பிக்கு அமைந்திருக்கிறது. என்றார்.

இது குறித்து நெட்டிசன்ஸ், ‘தனுஷ் தனது அக்கா மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இது சினிமாவில் தொன்றுதொட்டு தொடரும் நிகழ்வுகள்தானே. இதை விடுத்து, ஏனிந்த ரீல்ஸ்?. சொந்த தயாரிப்பில் என் தம்பி ஹீரோவாக வருகிறார். வரவேற்பு தாருங்கள்’ என கேட்கலாமே’ என கூறி வருகிறார்கள்.

why not acted in oho entan baby vishnu vishal explain
why not acted in oho entan baby vishnu vishal explain